நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே….  இந்த சபையில் அன்னை பாரதத்தை பற்றி சொல்லப்பட்டவை எல்லாம் ஒவ்வொரு இந்தியர் மனதிலும் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் அவர்களே… இவர்களுக்கு என்ன ஆனது என்று எனக்கு புரியவில்லை ? ஆட்சியில் இல்லாமல் இவர்கள் இப்படி ஆகிவிடுவார்களா ? இந்த அரசியல் என்ற சுகம் இல்லாமல் இவர்களால் இருக்க முடியாதா ?

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே… சில மக்களுக்கு இந்திய தாயின் மரணத்தை பற்றி ஏன் இவர்கள் நினைக்கிறார்கள் ? இதைவிட துர்பாக்கியம் என்ன இருக்கும். இவர்கள் ஜனநாயக படுகொலை பற்றி பேசுகிறார்கள். சில சமயத்தில் அரசியல் சட்டத்தின் படுகொலைகள் பற்றி பேசுவார்கள். எல்லாம் இவர்களது மனதில் இருக்கின்றது. அதுதான் அவர்களது செயல்களிலும் –  பேச்சுகளிலும் வெளி வருகிறது. இதை சொல்பவர்கள் யார் ?

இந்தியப் பிரிவினையில் ”அந்த  14 ஆகஸ்ட்” இந்தியாவின் பிரிவினை நமக்கு வலியை ஏற்படுத்துகிறது. இவர்கள்தான் இந்தியாவை மூன்று துண்டுகளாக மாற்றினார்கள். பாரத தாயை அடிமை சங்கிலியில் இருந்து விடுவிக்க வேண்டியவர்கள். ஆனால் இவர்கள் என்ன செய்தார்கள் ? பாரத அன்னையின் கைகளை வெட்டினார்கள். இவர்களே இந்திய அன்னையை துண்டு துண்டாக்கினார்கள். இவர்கள் எந்த வாயை வைத்துக்கொண்டு… எந்த முகத்தை வைத்துக் கொண்டு இவ்வாறு பேசுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.

வந்தே மாதரம் என்ற பாடல் நாட்டுக்காக உயிரை கூட விட  மக்களை தயார் செய்தது. வந்தே மாதரம் என்பது விழிப்புணர்வின் ஒரு தீ- யானது. இவர்கள் வந்தே மாதரம் பாடலைக் கூட துண்டு துண்டாக்கினார்கள் என தெரிவித்தார்.