நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, இவர்கள் யார் என்றால் ? இந்தியா நீ துண்டு துண்டாகி விடுவாய் என்று கூறுகின்ற ஒரு கூட்டத்திற்கு துணை புரிபவர்கள் இவர்கள். வடகிழக்கை இபைப்பதை வெட்டிவிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இவர்கள் உதவி செய்கின்றார்கள். இப்போது வெளிநடப்பு செய்திருக்கிறார்களே இவர்கள் என்னுடைய கேள்விக்கு பக்கத்தில் இருப்பவர்களிடம் பதில் சொல்லட்டும்.

கச்சத்தீவு என்றால் என்ன ? இவ்வளவு பெரிய விஷயங்களில் எல்லாம் பேசுகிறார்கள் அல்லவா…  கச்சத்தீவு என்றால் என்ன என்று அவர்களிடத்தில் கேளுங்கள். திமுக அரசின்  முதல்வர்  இப்போது கூட எங்களுக்கு கடிதம் எழுதுகிறார். மோடி அவர்களே… கச்சத்தீவை திரும்பக் கொண்டு வாருங்கள் என்று கடிதம் எழுதுகிறார்.

தமிழகத்திலிருந்து ஸ்ரீலங்காவுக்கு செல்லும் வழியில் ஒரு சிறிய தீவு. யார் யாரோ பிற நாடுகளுக்கு நம்முடைய பகுதிகளை கொடுத்திருக்கிறார்கள். அது அன்னை பாரத தாயின் அங்கம் இல்லையா ? அந்த சமயத்தில் யார் இருந்தார் ? ஸ்ரீமதி இந்திரா காந்தியின் தலைமையில் இது நடந்தது. காங்கிரசின் வரலாறு என்னவென்றால் ? பாரதத் தாயை அங்கஹீனம் செய்ததுதான் என தெரிவித்தார்.