சமூக வலைதளங்களில் நாள் தோறும் பல அதிசயமான மற்றும் பரபரப்பான வீடியோக்கள் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில், இரண்டு கோழிகள் ஒன்று சேர்ந்து ஒரு குட்டி நாகப்பாம்பை கடித்து கொன்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பைக்கின் அருகே அந்த நாகப்பாம்பு புழுதியின் நடுவில் நகர்ந்து சென்ற நிலையில், அங்கு வந்த இரண்டு கோழிகளும் அதனை மிதித்து, கடித்து, இறுதி வரை வேட்டையாடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

 

View this post on Instagram

 

A post shared by Aditya Gupta (@vlogger_aditya_06)

“>

இந்த வீடியோவில், ஒரு கோழியின் வாயில் நாகப்பாம்பு சிக்கியுள்ளதைக் காணலாம். மற்றொரு கோழியும் துணிச்சலுடன் அருகே வந்து அந்த நாகத்தை தாக்குவதும் இடம்பெற்றுள்ளது. பாம்பு உயிருடன் தப்பிக்க முயன்ற போதும், அந்த கோழிகள் அதை விடாமல் தொடர்ந்து தாக்கி இறுதியில் கொன்று விட்டன.

இந்த அரிய காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது போன்ற இயற்கை நெருக்கடியின் மத்தியில் கோழிகளின் தைரிய செயல் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.