கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் ஒரு அதிர்ச்சி வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சவப்பெட்டிக்குள் படுத்திருக்கும் ஒரு பெண் திடீரென கண்களை திறந்து கேமராவை நோக்கிப் பார்ப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த காட்சி சமூக ஊடகப் பயனர்களை அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது. பலர் அந்தப் பெண் இறந்த நிலையிலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டாரா என எண்ணி அதிர்ச்சி கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

ஆனால், விசாரணையில் இந்த வீடியோ உண்மையானது அல்ல, முற்றிலும் சினிமா பாணியில் ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட வீடியோவாக உருவாக்கப்பட்டதுதான் என்பதும் தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்களில் பார்வையாளர்களை ஈர்க்க சிலர் இவ்வாறான போலி காட்சிகளை திட்டமிட்டு பதிவிடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மேலும், அந்த வீடியோவின் தொடர்ச்சியாக, சவப்பெட்டிக்குள் படுத்திருந்த அதே பெண் பின்னர் எழுந்து நிற்பது போன்ற காட்சியுடன் கூடிய மற்றொரு வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இதன் மூலம், இது உண்மையான சம்பவம் அல்ல என்பதும் உறுதியாகியுள்ளது.

சிலர், இறந்தவர்களின் உடலில் மரணத்திற்குப் பிறகும் தசை நரம்புகள் தளர்வடைவதால் சிறிய அசைவுகள் நிகழலாம் என விளக்கமளித்துள்ளாலும், தற்போதைய இந்த வீடியோ முழுமையாக மேடை அமைப்பில் எடுக்கப்பட்டதுதான் என நெட்டிசன்கள் பெரும்பான்மையாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோவின் பின்னணி குறித்து பல்வேறு கோணங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இவ்வாறான போலி காட்சிகளை பரப்புவது சமூக பொறுப்பின்மையாகும்” என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.