சேலம் மாவட்டம் கொங்கரப்பட்டியை சேர்ந்தவர் ஜோசப். இவர் கூலி வேலை பார்த்து தனது தாய் லில்லி புஷ்பா மற்றும் தங்கையை கவனித்து வந்தார். புஷ்பா தனது தந்தை தனக்கு எழுதி கொடுத்த 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். அந்த நிலத்தை புஷ்பாவிற்கு கொடுத்தது அவரது அண்ணனுக்கு பிடிக்கவில்லை.
இதனால் புஷ்பாவின் அண்ணன் மகன்கள் அந்த நிலத்தை கேட்டு தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று ஜோசப் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது மாமா மகன்களான ஜார்ஜ் மற்றும் அவரது தம்பி ஆகிய இருவரும் ஜோசப்புடன் தகராறு செய்து அவரது தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜோசப்பின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜார்ஜை கைது செய்தனர். தலைமறையாக இருக்கும் அவரது தம்பியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
