சென்னை மாவட்டம் திருவொற்றியூர் ராஜா கடை பகுதி சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி லதா. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரமேஷ் பாரிமுனையில் இருந்து திருவெற்றியூர் வரை செல்லும் மாநகர பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு அரசு பேருந்து திருவெற்றியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அந்த பேருந்து அஜாக்ஸ் பகுதியில் சென்ற போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் ரமேஷ் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகளும் ஓட்டுனரும் உடனடியாக ரமேஷை மீட்டு திருவொற்றியூர் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரமேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.