தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் நயன்தாரா இருக்கிறார். இவர் நடிப்பில்  வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் நயன்தாரா தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பிசியான நடிகையாக இருக்கும் நயன்தாரா தற்போது பாசமிகு தாயாக மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி கடந்தாண்டு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.