விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 1ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். தற்போது இரண்டு மாதம் முடிவடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியில் நேற்றைய தினம் ஜோதிகா வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் செல்லும் முன்பு கமலிடம் பேசும் போது இந்த வாரம் வெளியேற்றி விடுவேன் என்ற எண்ணம் எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வந்துவிட்டது என்று கூறினார்.

ஏற்கனவே ஜோதிகாவின் தாய் வனிதா தன்னுடைய முகத்தில் அடிபட்டு இருப்பது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஜோதிகாவிற்கு தெரிய வந்திருக்கிறது. அதனால் தான் அவர் சோகமாக இருக்கிறார் என்று சொல்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதன் முதலாக அவர் தன்னுடைய தாய் வனிதாவை விமான நிலையத்தில் சந்தித்து தன்னுடைய அன்பை பரிமாறி உள்ளார். இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar)