தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று (மார்ச் 7) மாமல்லபுரத்தில் சர்வதேச மகளிர் தின விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அவர்களுக்குப் போட்டியாகப் பெண்களைக் கவரும் வகையிலான பிரத்யேக தேர்தல் வாக்குறுதிகளை விஜய் இந்த விழாவில் வெளியிட உள்ளார்.
நான்கு முனைப் போட்டி நிலவும் இந்தத் தேர்தலில், பெண்களின் வாக்குகளைத் தன்வசப்படுத்த தவெக எடுத்துள்ள இந்த அதிரடி முயற்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறும் இந்த விழாவிற்கு QR குறியீடு கொண்ட அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
மகளிர் தின வாக்குறுதிகள் ஒருபுறம் இருக்க, வரும் மார்ச் 8-ம் தேதியன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கட்சியின் சார்பில் மகளிர் தினக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
இளைய தலைமுறையினரைத் தாண்டி அனைத்து வயது பெண்களின் ஆதரவையும் பெறும் நோக்கில் விஜய் வெளியிடப்போகும் அந்த “சர்ப்ரைஸ்” அறிவிப்புகள் என்னவாக இருக்கும் என்பதே தற்போதைய பேசுபொருளாக உள்ளது.
