”தவெக ஆட்சி நன்றாக இருக்கிறது, தமிழகத்தில் நல்லாட்சி தான் நடக்கும்” என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் தவெக அரசுக்கு ஆதரவாகப் பகிரங்கமாகப் பாராட்டுத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தான் அதிமுகவை உடைக்கவோ அல்லது பிளவுபடுத்தவோ முயல்வதாகச் சிலர் தேவையில்லாமல் வதந்திகளைப் பரப்பி வருவதாகக் கடுமையான கண்டனம் தெரிவித்தார்.
மேலும், தன் மீது விமர்சனம் வைத்த பழ.கருப்பையாவை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய லீமா ரோஸ், “பழ.கருப்பையா இதுவரை நாட்டுக்கு என்ன ஜிஎஸ்டி கட்டியிருக்கிறார்? மக்களுக்கு அவர் என்ன நன்மைகளைச் செய்திருக்கிறார்? இதையெல்லாம் ஆதாரத்தோடு நிரூபிக்க அவர் தயாராக இருக்கிறாரா?” என்று காரசாரமாகச் சவால் விடுத்தார்.
சும்மா வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி அரசியல் செய்யக் கூடாது என்றும், எல்லை மீறிப் பேசினால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்ட ரீதியாகச் சந்திக்க நேரிடும் என்றும் பழ.கருப்பையாவுக்கு லீமா ரோஸ் விடுத்துள்ள இந்த அதிரடி எச்சரிக்கை சோஷியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது.
