தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்த திரைப்படக் குறித்த அப்டேட்டுகள் அடிக்கடி வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தளபதி 68 படத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க அவரிடம் படக்குழு பேசி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான செய்தி இணையத்தில் பரவுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.