விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் டைரக்டில் உருவாகும் லியோ திரைப்படத்தின் மீது தமிழ் சினிமா ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. லியோ படம் வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது என்று முன்பே படக்குழு அறிவித்திருக்கிறது. பொதுவாக தளபதி படத்திற்கு அதிகமான தியேட்டர்கள் கிடைக்கும்.

இந்நிலையில் இப்போது கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் திரைப்படத்தை லியோவுக்கு போட்டியாக களமிறக்க இருக்கின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக தளபதியின் பிகில் உடன் கார்த்தியின் கைதி படம் மோதி நல்ல வசூலும் பெற்றது. இப்போது மீண்டும் தளபதிக்கு போட்டியாக கார்த்தி வர உள்ளதால், இம்முறை அதே வசூல் திரும்ப நடக்குமா..? என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.