“நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்த எதிர்பாராத தோல்வி, அரசியல் வட்டாரத்தை உலகிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது .
இந்த நிலையில், மு.க.ஸ்டாலினின் இந்த அதிர்ச்சி தோல்வி குறித்து கவிஞர் வைரமுத்து உருகி உருகி மேடையில் பேசினார். அதில், ‘திமுக தோற்றிருக்கலாம், ஆனால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தோற்றிருக்கக் கூடாது; காற்றில் ஈரப்பதம் குறைந்தாலும் கடலில் ஈரப்பதம் குறையக் கூடாது’ என்று உணர்ச்சிப்பொங்கக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொளத்தூர் தொகுதியை தமிழ்நாட்டின் ஒரு தொகுதியை அல்லது சிங்கப்பூரின் ஒரு பகுதியா என்று கேட்கும் அளவுக்குத் தரமாக மாற்றி வைத்தவர் ஸ்டாலின் என்று பாராட்டிய வைரமுத்து, மே 4 , அவர் தோற்றது ஒரு நாளாக இருக்கலாம், ஆனால் அவருக்கு வாக்களிக்காத அந்த தொகுதி மக்கள் 365 நாட்களும் தோற்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று வேதனைப்பட்டுள்ளார்.
‘ஸ்டாலினுக்காக வருந்துவதை விட, அந்த தொகுதி மக்களுக்காகத்தான் நான் அதிகம் வருந்துகிறேன்’ என கவிஞர் வைரமுத்து பகிர்ந்துள்ள இந்த எமோஷனல் கூறினார் , தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி, அரசியல் களத்தில் தீயாய் விவாதிக்கப்பட்டு வருகிறது .
“தமிழ்நாட்டின் ஒரு தொகுதியா?
சிங்கப்பூரின் ஒரு பகுதியா? என மாற்றிவைத்த மு.க.ஸ்டாலின் தோற்றிருக்கக்கூடாது ”- கவிஞர் வைரமுத்து#Vairamuthu | #MKStalin | #DMK | #Kolathur pic.twitter.com/hUJhIVkQF9
— PttvOnlinenews (@PttvNewsX) June 9, 2026
“>
