கர்நாடகாவில் அண்மையில் நடந்த ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, ஜூன் 3-ஆம் தேதி அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்றுக் கொண்டார்.

முன்னாள் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய துணை முதல்வராக டாக்டர் ஜி.பரமேஸ்வரா பொறுப்பேற்றார். மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், சித்தராமையா, கேரள முதல்வர் வி.டி.சதீசன் மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் இந்த பதவியேற்பு விழா கோலாகலமாக நடந்தது.

இந்த புதிய வரலாற்றுத் தொடக்கத்தைக் கொண்டாடும் விதமாக, டி.கே.சிவகுமார் தனது சொந்த தொகுதியான கனகபுராவின் ஹாரோஹள்ளிக்குச் சென்றபோது, தொண்டர்கள் அவருக்கு நூற்றுக்கணக்கான ஆப்பிள்களால் ஆன பிரம்மாண்ட மாலையை ஹைட்ராலிக் கிரேன் மூலம் அணிவித்து அசத்தினர்.

இதனால் அதீத உற்சாகமடைந்த சிவகுமார், அந்த மாலையிலிருந்து ஆப்பிள்களைப் பறித்து, அதைத் தன் வாயால் கடித்துவிட்டு அப்படியே அனல் பறக்கும் கூட்டத்தை நோக்கி வீசினார். எச்சில் ஆப்பிள் என்று கூடப் பார்க்காமல், தொண்டர்களும் அதை முண்டியடித்துக் கொண்டு பிடித்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி, நெட்டிசன்களின் கடுமையான விமர்சனங்களை வாரிக்குவித்து வருகிறது.

“>