சமீபத்தில் கட்சியின் பெயரை அறிவித்த விஜய் தனது கட்சியான ‘தமிழக வெற்றி கழகம்’ 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக கூறியிருந்தார். இதனையடுத்து ‘விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள், இனி தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்களாக இருப்பார்கள்’ என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

அரசியலில் குதித்துள்ள விஜய், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் தீவிர அரசியல் பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதனிடையே, தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஆனந்த், ‘தளபதி தலைவராகி விட்டார். இனி ஒரே தலைவர் தான்.’என்றார்.