உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் அதன் பிறகு படிப்படியாக குறைந்தது. தற்போது கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் ஓமிக்ரான் வகை கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த வகை கொரோனா அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இணை நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் லேசான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சோர்வு மற்றும் சளி போன்ற அறிகுறிகள் ஏதாவது இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.