தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் தல அஜித்குமாருக்கு பெரும்பாலான ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் வசூலை அள்ளி குவித்தது. இந்நிலையில் தல அஜித்குமாரின் அடுத்த பட வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் “AK Moto Ride” என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ளேன் என்று நடிகர் அஜித்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு “AK Moto Ride” சுற்றுப்பயணங்களை வழங்கும் என்று அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.