நடிகர் சித்தார்த் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் “டக்கர்”. கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கும் இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்து உள்ளார். அதோடு யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உட்பட பலர் நடித்திருக்கின்றனர். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

அண்மையில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் டக்கர் படத்தின் டிரைலரை படக்குழுவானது வெளியிட்டு உள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி உள்ள இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. டக்கர் படம் வரும் ஜூன் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.