வாழ்க்கையில் பயத்தை விட வயிற்றுப் பசி தான் மிகப்பெரியது என்பதை உணர்த்தும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சாதாரண மனிதர்களுக்குப் பார்ப்பதற்கே தலைசுற்றல் மற்றும் நடுக்கத்தை ஏற்படுத்தும் ஒரு மிக உயர்ந்த கட்டிடத்தின் உச்சியில், எந்தவொரு போதிய பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தொழிலாளர்கள் சிலர் வேலை செய்யும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.
மேலும் உயரத்தைப் பார்த்தாலே தொண்டை வறண்டு போகும் அளவுக்கு ஆபத்தான அந்த இடத்தில், தங்களின் உயிரைப் பணயம் வைத்து அவர்கள் உழைப்பது பொழுதுபோக்கிற்காக அல்ல; தங்களின் இரண்டு நேர உணவுக்காகவும், தங்களை நம்பியிருக்கும் குடும்பத்தின் பசியைப் போக்குவதற்காகவுமே ஆகும்.
What is Fear ✊
डर सबको लगता है लेकिन पेट अक्सर डर से बड़ा निकलता है
जहां लोगों की सांसे थम जाती है वहां कुछ लोग अपनी कमाईसे रोजी रोटी तलाशते हैं गरीबी इंसान को वहां पहुंचती है जहा
पहुंचने की हिम्मत हर किसी में नहीं होती है मंजिल जमीन पर
हो लेकिन अक्सर इनका संघर्ष आसमान में… pic.twitter.com/Fi7ixyaiBm— KUNDAN PATEL (@KUNDAN00PATEL) June 12, 2026
“>
இந்த வைரல் வீடியோ, வறுமையும் வாழ்வாதாரப் போராட்டமும் ஒரு மனிதனை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பதை நெஞ்சை உலுக்கும் வகையில் காட்டுகிறது. அன்றாடப் பிழைப்பிற்காகத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கடுமையான சவால்களையும், அவர்களின் பாதுகாப்பற்ற உழைப்புச் சூழலையும் இந்தத் தொகுப்பு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இந்நிலையில் பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் இந்தத் துயரமானக் காட்சி, தங்களின் பசி என்னும் கொடுமையான அரக்கனை வெல்வதற்காக, மரண பயத்தைக் கூடத் தூக்கி எறிந்துவிட்டுப் போராடும் உழைக்கும் வர்க்கத்தின் நிதர்சனமான வாழ்க்கைப் போராட்டத்தை நமக்கு உணர்த்துகிறது.
