தூத்துக்குடி தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் அஜிதா ஆக்னல். மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருந்த இவர், பனையூரில் நடிகர் விஜய்யின் காரை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். இந்தச் சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று தேர்தல் பிரசாரத்திற்காக தூத்துக்குடி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அஜிதா ஆக்னல் திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. விஜய்யின் தவெக-விலிருந்து விலகி, அஜிதா திமுகவில் ஐக்கியமாவது தூத்துக்குடி அரசியல் களத்தில் தவெக-விற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
