தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், ஊழலற்ற நிர்வாகத்தை வழங்க ‘Tamilnadu Citizen Card’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். லஞ்சம் இல்லாமல் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசின் நலத்திட்டங்கள் நேரடியாகப் போய்ச் சேர இந்த கார்டு வழிவகை செய்யும் என்று அவர் உறுதி அளித்தார்.

​பொதுமக்களை அரசு அலுவலகங்களில் டாக்குமெண்ட் சரியில்லை எனக் கூறி அலைக்கழிப்பதற்குக் காரணம் ஆவணங்கள் அல்ல, அவர்களுக்குத் தேவையான ‘டப்பு’ (பணம்) தான் காரணம் என விஜய் காட்டமாக விமர்சித்தார். இந்த சிஸ்டத்தை மாற்றவே சிட்டிசன் கார்டு கொண்டு வரப்படுவதாகவும், இதன் மூலம் மக்கள் யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் அதிரடியாகப் பேசியுள்ளார்.