மத்தியப் பிரதேச மாநிலத்தில், 10,000-க்கும் மேற்பட்ட ஃபாலோவர்களைக் கொண்டு சோசியல் மீடியாவில் கலக்கிக் கொண்டிருந்த இன்ஸ்டா பிரபலம் பழக் ரஜக், தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.
கடந்த 2025 ஏப்ரலில் அமித் ரஜக் என்பவருடன் திருமணமாகி ஒரே வருடத்தில் இந்தத் துயரம் நடந்துள்ளது. “அண்ணா.. இவங்க என்னை எப்படியாவது கொன்னுடுவாங்கப்பா, என்னை உடனே வந்து கூட்டிட்டுப் போயிருங்க” என்று பழக் உயிரிழப்பதற்கு வெறும் அரை மணி நேரத்திற்கு முன்பு தனது சகோதரனிடம் போனில் கதறிய ‘லைவ்’ ஆடியோ தற்பொழுது வெளியாகி நெஞ்சைப் பதற வைத்துள்ளது.
காரும், ஒரு லட்ச ரூபாய் எஃப்டி (FD) பணமும் கேட்டு மாப்பிள்ளை வீட்டார் கொடுத்த வரதட்சணைக் கொடுமையால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார் எனப் பெற்றோர் கதறும் நிலையில், பழக் தனது கடைசி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் கடுமையான மன அழுத்தம் மற்றும் ‘பேனிக் அட்டாக்’ (Panic Attack) குறித்துப் பதிவிட்டிருந்தது இந்த வழக்கைப் பயங்கர மர்மமாக மாற்றியுள்ளது.
இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் சிஎஸ்பி ராபின் ஜெயின் தலைமையிலான போலீஸார் செல்போன் தரவுகளைக் கையில் எடுத்து தீவிர ஆக்ஷனில் இறங்கியுள்ளது வடமாநில அரசியலில் மெகா சலசலப்பைக் கிளப்பியுள்ளது.
