தமிழில் ஷிரோ என்ற படத்தில் சன்னி லியோனுடன் இணைந்து நடித்த நடிகர் சுஜித் ராஜேந்திரன் மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருந்தது மட்டுமல்லாமல்  பாடகர், நடனக் கலைஞர் என பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கினார்.

கடந்த வாரம் கொச்சியில் சாலை விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இவருடைய மறைவிற்கு திரையுலகினரும் மற்றும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.