பிலிப் ஜான் இயக்கும் ‘சென்னை ஸ்டோரி’ என்ற ஹாலிவுட் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக விவேக் கல்ரா நடிக்க இருந்தார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் திடீரென படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. என்ன காரணம் என்பது குறித்த தெளிவான தகவல் வெளியாகவில்லை. முன்னதாக இதே கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க இருந்த நிலையில் அவரும் படத்தில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.