நடிகை சமந்தா சமீபத்தில் பாட்காஸ்ட் ஒன்றை தொடங்கியுள்ளார். அதில் உடல் நலம் சார்ந்த விஷயங்களை பகிர்ந்து வருகின்றார். அப்போது ரசிகர் ஒருவர், உங்கள் அப்பாவி கணவன் நாக சைதன்யாவை ஏன் ஏமாற்றினீர்கள் என்பதை சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்த சமந்தா, மன்னிக்கவும் இந்த யோகா நடைமுறைகள் உங்களுக்கு உதவாமல் இருக்கலாம். எனவே உங்களுக்கு இதை விட வலிமையான ஒன்று தேவைப்படலாம், நன்றாக இருங்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். சமந்தாவின் இந்த பதிலுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.