தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அதன்படி, பாஜக – 20, பாமக 10, அமமுக -2, ஐஜேகே -1, புதிய நீதிக் கட்சி 1. ஜான் பாண்டியன் – 1, தேவநாதன் – 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமாகாவிற்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும், 4 கூட்டணி கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில்  தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் நேற்று இரவு வெளியானது. அதன்படி திருவள்ளூர், வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது பாஜக.