தமிழக அமைச்சரவையில் காங்கிரஸிற்குப் பங்கு அளித்தால் மட்டுமே, புதுச்சேரியில் திமுகவிற்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்பது ஒத்து வராது” எனத் தெரிவித்திருந்தார். இது கூட்டணி வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

இதற்குப் பதில் அளிக்கும் வகையில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நாராயணசாமி கூறியதாவது:
“தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்பட வேண்டும். அங்கு உரிய பங்கு அளிக்கப்பட்டால் மட்டுமே, புதுச்சேரி அமைச்சரவையில் திமுகவிற்குப் பங்கு தருவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்றார்.

மேலும் தமிழக அரசியலில் ‘ஆட்சியில் பங்கு’ என்ற விவாதம் சூடுபிடித்துள்ள நிலையில், நாராயணசாமியின் இந்த கருத்து திமுக – காங்கிரஸ் கூட்டணியில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.