தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து தாம் பேசியது யாரையும் புண்படுத்தும் நோக்கத்திலானது அல்ல என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், நடிகர் விஜய் குறித்து விமர்சிக்கும் போது, “பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் அவர் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும். த்ரிஷாவிடமிருந்து வெளியே வர வேண்டும். அப்போதுதான் அரசியல் செய்ய முடியும்” என்று குறிப்பிட்டிருந்தார். ஒரு கட்சித் தலைவரின் இத்தகைய தனிப்பட்ட விமர்சனம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.

இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நயினார் நாகேந்திரனுக்குக் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ், “நயினார் நாகேந்திரன் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரனிடம் ராமதாஸின் கருத்து  குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,

மேலும் என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. நான் யாரையும் காயப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை.” எனக் கூறி, தனது முந்தைய பேச்சுக்கு ஒரு விளக்கத்தை முன்வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக அரசும், நடிகர் விஜயும்தான் காரணம் எனப் புதிய குற்றச்சாட்டை முன்வைத்தார். அரசியலுக்கு வந்துள்ள விஜய், இதுபோன்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் உரிய கவனம் செலுத்தவில்லை என  அவர் விமர்சித்தார்.