தமிழக முதல்வர் ஸ்டாலின் 16வது நிதி குழு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கான நிதியை குறைத்துவிட்டு, வளர்ச்சியை எதிர் நோக்கம் பகுதிகளுக்கு நிதியை மடை மாற்றுவதால் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியும் பாதிப்படைகிறது. இதனால் வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு இறுதியாக கிடைக்க வேண்டிய ‌ வரி பகிர்வும் குறைந்துவிடும். கடந்த காலங்களில் வளர்ச்சிக் குன்றிய மாநிலங்களுக்கு அதிக வரி  வழங்கியும் எந்த பலனும் இல்லை.

நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் வரி பகிர்வு முறை மூலமாக எந்தவிதமான மாற்றமும் நடக்கவில்லை. எனவே 16வது நிதியக்குழு புதிய அணுகுமுறைகளை வகுக்க வேண்டும். அதன்பிறகு மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாடு பெற்று வந்த பயன்கள் குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு மாறுவதற்கு முன்பு முதியோர் அதிகம் வாழும் மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும் அபாயம் ஏற்படும் என்றார். மேலும் மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.