தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் பல அறிவிப்புகளும் வெளியிடப்பட்ட நிலையில் தமிழக சட்டப்பேரவையில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை  விவசாய நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் சற்றுமுன் தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட்டில் சிறுதானிய உற்பத்திக்கு முக்கியத்துவம் தரக்கூடிய புதிய அறிவிப்புகள் மற்றும் தமிழகத்தில் புதிய வேளாண் கல்லூரிகள் குறித்த அறிவிப்புகளும் வெளியாக வாய்ப்புள்ளது