நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை பாஜக வேட்பாளராக களமிறங்கும் தமிழிசை சௌந்தரராஜன் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழிசை பெயரில் அசையும் சொத்துக்கள் 1.57 கோடி, கணவர் பெயரின் மொத்தம் 3.92 கோடி அசையும் சொத்துக்கள், மகள் பெயரில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்கள், நான்கு கார்கள் இருப்பதாகவும் தனது பெயரில் 60 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களும் கணவர் சௌந்தர்ராஜன் பெயரில் 13.70 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும், மகள் பெயரில் 70 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது