நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு அனைவரையும் வியக்க வைத்துள்ளது. கையில் ரொக்கமாக 2000 ரூபாய் மட்டுமே உள்ளது. எல்லா வங்கிகளையும் சேர்த்து சேமிப்பு 1.30 லட்சம் ரூபாய் உள்ளது. மொத்தமாக இவரின் சொத்து மதிப்பை நான்கு லட்சம் ரூபாய் தான். இவருக்கு மட்டும் கடன் 3.10 லட்சம் ரூபாய் உள்ளது. இவருடைய மனைவிக்கு 4.75 லட்சம் ரூபாய் கடன் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.