தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு ஒவ்வொரு மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தீபாவளி பண்டிகை காரணமாக நவம்பர் மாதத்தில் கடந்த நவம்பர் மூன்றாம் தேதி மற்றும் நவம்பர் 10 ஆகிய தேதிகளில் நியாய விலை கடைகள் இயங்கும் என அரசு அறிவித்தது.

இந்த இரண்டு விடுமுறை நாட்களிலும் பணியாற்றியதால் அதற்கு ஈடாக நவம்பர் 13 மற்றும் நவம்பர் 25 ஆகிய இரண்டு நாட்களிலும் நியாய விலை கடை பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்த இரண்டு நாட்களிலும் ரேஷன் கடைகள் இயங்காது என அரசு தெரிவித்துள்ளது.