இலங்கையில் மலையக தமிழக பேச்சியில் முதல்வர் உரையை ஒளிபரப்ப தடை செஞ்சது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

இலங்கையை ஜனநாயக நாடுனு சொன்ன பெருமக்கள் தான் இதுக்கு பதில் சொல்லணும். இதை நீங்க நுட்பமா கவனிக்கணும். தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர்.. அங்கிருக்கிற தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றதை நீங்கள் தடுக்கின்றீர்கள் என்றால், அங்க என்ன ஜனநாயக இருக்குன்னு  பாருங்க ?  அவருக்கே அந்த நிலைமைனா…  சாதாரண குடி மக்களுக்கு என்ன பாதுகாப்பு அங்கு  இருக்குன்னு  நீங்க சிந்திக்கணும்… அப்படித்தான் பாக்கணும் இந்த பிரச்சனையின் ஆழத்தை…

முதல்ல இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்பதை மறுத்து, நீங்க புரிஞ்சுக்கணும். இந்தியா ஒரு நாடுனா…. இந்த நாட்டுல மலையாளிகள், ராணுவத்தினர் இடம்பெற முடியும், தமிழர்கள் இடம்பெற முடியும், சீக்கியர்கள் பெற முடியும், தெலுங்கர்கள் இடம்பெற முடியும். பஞ்சாபிகள் எல்லாருமே இடம்பெற முடியும். இது ஒரு நாட்டின் ராணுவம் என இருக்கு. ஆனா இலங்கையில்  நாட்டில் நாங்கள் அந்த நாட்டின் ராணுவத்தில் இடம் பெற முடியுமா ?

ஒரு பூர்வ குடிகள், பெரு தேசிய பேரினம். அங்க வேணா எண்ணின்னையில் நாங்க குறையா இருக்கலாம். உலகெங்கும் யார் பெரிய எண்ணிக்கையில் இருக்கிறது. ஆனால் நீ என்னை அந்த நாட்டு ராணுவத்திலேயே இடம்பெற முடியாத நிலை வச்சி இருந்தான்னா…. அந்த நாட்டு ராணுவம் என் இன மக்களை எப்படி பாதுகாக்கும் ? அப்ப எப்படி ஜனநாயக நாடு என்கிறீங்க…..

விழுக்காடு அடிப்படையில 60 : 40ன்னு  இருக்கணும். இல்லன்னா…  70 : 30 ஆவது இருக்கணும். அப்போ அது இல்லன்னு இருக்கும் போது ஜனநாயகமே இல்லையே… அப்போ அது ஜனநாயக நாடு….. ஜனநாயக நாடு… இலங்கை ஒரு  ஜனநாயக நாடு என சொல்லிட்டு,  நான் என் உரிமைக்காக போராடும் போது என் பக்கம் நிற்காமல்…. ஏன் உரிமை பறிச்சி அழிச்சி ஒழிக்குறவன் பக்கம் நிற்கிறது எந்தவிதத்தில்  நியாயம் ? என தெரிவித்தார்.