செய்தியாளர்களிடம் பேசிய  வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தமிழ்நாட்டில்  300 புலிகள் கிட்ட  இருக்கு. கடந்த முறை யானைகள் சென்சஸ் எடுத்தோம்.  தமிழ்நாட்டில யானைகள் சென்சஸ் அதிகமா இருக்கு.புலிகள்  சென்சஸ்ஸும் நல்ல முறையில் அதிகரிச்சிட்டு தான் இருக்கு. சிறந்த முறையில் வனத்துறையும்,  தமிழ்நாடு அரசும் வனம்  சார்ந்த விலங்குகளுக்கும்,  வனத்திற்கும் நல்ல முறையில் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நீலகிரி காடுகளில் 10க்கும் மேற்பட்ட புலிகள் உயிரிழந்தது தொடர்பாக  NDCS சார்பா ஒரு பிரஸ் நியூஸ் கொடுத்து இருக்கின்றோம்.  நாலு, அஞ்சு பேர் கொண்ட குழு வந்து ஆய்வு செஞ்சாங்க. அந்த புலிகள் இறந்ததற்கு  காரணங்கள் எல்லாமே இயற்கை காரணங்களே என அவர்கள் சொல்லி இருக்காங்க.  அதற்கான பிரஸ் நியூஸ் நாங்க உங்ககிட்ட கொடுத்திருக்கின்றோம்.

இயற்கை இடர்பாடுகள் சூழலில் சில புலிகள் இறந்திருக்கு. கூடுதலாக அதற்கு நாம் என்னென்ன கவனம் எடுக்க வேண்டும் அப்படிங்கறத நாங்க ஆய்வு செஞ்சுட்டு இருக்கோம்.  வருங்காலத்தில் எந்த முறையில் நாம்   புலிகளை காக்க வேண்டும். அனைத்து வனவிலங்குகளையும் காப்பதற்கான அனைத்து ஆலோசனைகளும் தொடர்ந்து நாங்கள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

வனத்துறைக்குள் ஏற்கனவே இருக்கின்ற கோவில்களுக்கு எல்லாம் வனத்துறை சார்ந்து….  அங்கு இருக்கிற மாவட்ட நிர்வாகம் சார்ந்து….  அங்கு இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள்…. அங்கு இருக்கக்கூடிய கோவில் சார்ந்து… இந்து  அறநிலைத்துறை….  அங்கு  குழு அமைத்து…  அங்கு ஏற்கனவே இருக்கிற கோவில்களில்… வழிபாட்டு முறைகளில் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக வழிபடுவதற்கு எல்லா வகையிலும் உதவி கொண்டுதான் இருக்கிறோம்.

புதிதாக வேறு எந்த இடத்திலும்,  எந்த கட்டுமானங்களும் கொண்டு வருவதற்காக ஊக்கப்படுத்த முடியாது.  ஏற்கனவே இருக்கிற கோவில்களில் நல்ல முறையில் வழிபட… நாம எந்த தடையும் விதிக்கல.  அதற்கு ஒரு நெறிமுறை படுத்துவது. ஒரு கோவில் ஒவ்வொரு காடு பகுதிகளிலும் பழங்காலமாய் இருக்கும். அங்கு  வருஷ வருஷம் ஒரு சில திருவிழாக்கள் இருக்கும். அதற்கெல்லாம் நெறிமுறைப்படுத்தி,  மாதிரி மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து….

ஹிந்து சமய அறநிலையத்துறையாக இருக்கட்டும்…  அங்கு இருக்கக்கூடிய குழுவாக இருக்கட்டும்…  எல்லாருமே சேர்ந்து எத்தனை நாள் ?   காலை எத்தனை மணியிலிருந்து,  மாலை எத்தனை மணி வரை…  யார் யார் அனுமதிக்கப்படுவார் ? எத்தனை நாள் அனுமதிக்கப்படுவார் ? அப்படி என்ற ஒரு சில விதிமுறைகளையும்,  நெறிமுறைகளையும் நாம் வெளியிட்டு இருக்கிறோம். சில அரசாணைகளும் நிறைய கோவில்களுக்கு உள்ளது. அதற்கு உட்பட்டு எந்த முறையிலும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் அதை நல்லபடியாக நாங்கள் அவர்களுக்கு அறிவுரைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.