தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆவின் நிறுவனம் மூலமாக தீபாவளி பண்டிகை காலத்தில் இனிப்பு வகைகள் தயாரித்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த வருடம் சிறப்பு இனிப்பு வகைகள் விலைமாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தீபாவளி இனிப்புகள் விற்பனை இன்று  அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கும்.

ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் சில்லறை விற்பனை நிலையங்களில் இவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு குறு நிறுவனங்கள் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான இனிப்பு வகைகளை வாங்குவதற்கு தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் ஆறாவது தளம் விற்பனை பிரிவு கூட்டாண்மை அலுவலகம் நந்தனம் சென்னை 35 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு  94449 15453, 73580 18394, 73580 18392, 73580 18390 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.