தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களுக்காகவும் மாணவ மாணவிகளுக்காகவும் பல்வேறு புதிய திட்டங்களை அரசு சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதன்படி உங்களில் ஒருவன் என்ற தலைப்பின் மூலம் சோசியல் மீடியாவில் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு, சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் 85 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு சில வாக்குறுதிகளை அடுத்த ஓராண்டுக்குள் நிச்சயம் நிறைவேற்றி காட்டுவேன் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.