தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு பிறகு தான் மாணவர் சேர்க்கை தொடங்கும்.ஆனால் இந்த வருடம் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளதால் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்களை சேர்ப்பதற்கு என கால அவகாசம் எதுவும் இல்லை. ஆகஸ்ட் மாதம் வரை மாணவர்கள் வந்தாலும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். ஒவ்வொரு வருடமும் 5 லட்சம் வரை மாணவர் சேர்க்கை சராசரியாக இருக்கும். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர 60,000 மேற்பட்டோர் விண்ணப்பம் பெற்றுள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது.