தமிழகத்தில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்வாரியத்தின் சார்பில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோர்களுடன் இருந்தே மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை பெரும்பாலும் நுகர்வோர்கள் மின்வாரியத்திற்கு நேரடியாக சென்றும்  அல்லது அருகில் உள்ள இ சேவை மையம் மூலமாக ஆன்லைனிலும் செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் மின்வாரிய அலுவலகங்களில் பணி சுமையை குறைக்க நுகர்வோர்கள் ஆன்லைனில் கட்டக்கூடிய அதிகபட்ச கட்டணம் ஐந்தாயிரம் ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக குறைந்து உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே இனி ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்தினால் அதனை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.