தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக இளைஞர்களுக்கு திமுக அரசு சொன்னபடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரவில்லை என குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் திமுக ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில் கடந்த ஆட்சியில் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாம்களில் பாதி அளவு கூட நடத்தவில்லை. சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வேலை வாய்ப்பு முகாம்களை தான் நடத்தி இருக்கிறது.

திறனற்ற திமுக அரசு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் தனியாருக்கும் வாய்ப்பு கொடுக்காமல் தொடர்ந்து இளைஞர்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. மேலும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதோடு தமிழக இளைஞர்களை வஞ்சித்து வருவதை உடனடியாக நிறுத்தி அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கொள்கிறேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.