தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் இன்றுடன் சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் இன்று சட்டசபை கூட்டத்தொடரில் திமுக அரசின் சாதனைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் விரிவாக பேசிய நிலையில் அடுத்த முறையும் கண்டிப்பாக திமுக ஆட்சி தான் அமையும் என்றும் தமிழக மக்கள் அதற்கு உறுதுணையாக இருப்பார்கள் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்தார். அதன் பிறகு திராவிடம் மாடல் 2.0 ஆட்சியின் போது தங்களுடைய சாதனைகளை தாங்களே முறியடிப்போம் என்றும் மகளிர் உரிமைத்தொகை தொடர்ந்து வழங்கப்படும் வேண்டும் கூறினார்.
இந்த நிலையில் சட்டசபை கூட்டம் நிறைவடைந்ததும் முதல்வர் ஸ்டாலினை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சந்தித்து பேசினார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின் தனியாக செயல்பட்டு வந்த ஓபிஎஸ் இதுவரை யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்கவில்லை. அவர் மீண்டும் அதிமுகவில் சேர முயன்ற நிலையில் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டார். அதே நேரத்தில் டிடிவி தினகரன் மற்றும் பாஜகவினர் ஓபிஎஸ் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவார் என்று கூறி வருகின்றனர்.
இதற்கிடையில் தமிழக வெற்றி கழகத்துடன் அவர் கூட்டணி வைக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். மேலும் இந்த வியூகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேமுதிக திமுகவுடன் கூட்டணி அமைத்த நிலையில் தற்போது திடீரென அவர் திமுக தலைவரை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது
