தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இரண்டு ஆண்டுகளை கடந்துள்ளது. இந்நிலையில் அமைச்சரவை மாற்றத்திற்கு அரசு தயாராகி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் வருகின்ற மே 23ஆம் தேதி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கு முன்னதாக தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.

அதன்படி சிவப்பு பட்டியல் ஒன்றை தயாரித்து அதில் சில அமைச்சர்களின் பெயரை சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் அமைச்சர்களின் பதவிகளை மாற்றம் செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதில் பால்வளத்துறை அமைச்சர் நாசரின் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.