
தமிழகம் முழுவதும் 35 டிஎஸ்பி- க்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அடையாறு காவல் ஆணையர் நெல்சன், தாம்பரம் உதவி ஆணையராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருள் செல்வன் தாம்பரம் போக்குவரத்து காவல் உதவி ஆணையராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் மோகன் திட்டக்குடி டிஎஸ்பி ஆகவும் திருவள்ளூர் மாவட்ட மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாக இருந்த இளங்கோவன் திருவொற்றியூர் காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.