திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதம்தோறும் பௌர்ணமி அன்று நடைபெறும் கிரிவலம் புகழ்பெற்றதாகும். ஒவ்வொரு மாதமும் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரை சேர்ந்த மக்கள் பலரும் கிரிவலம் செல்கின்றனர். அதிலும் குறிப்பாக கார்த்திகை தீபத்தை தொடர்ந்து வரும் பௌர்ணமி கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த நிலையில் மார்கழி மாத பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கான உகந்த நாள் நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை மறுநாள் டிசம்பர் 26ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கிரிவலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 12.30 மணி அளவில் தொடங்கும் இந்த கிரிவலம் நள்ளிரவு 11.55 மணிக்கு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.