டெல்லியில் திருட வந்த இடத்தில் பிறந்தநாள் கொண்டாடிய திருடன் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது டெல்லியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் திருடர் ஒருவர் திருட முயன்ற போது அங்குள்ளவர்களிடம் வசமாக சிக்கியுள்ளார்.
அப்போது திருடன் “இன்று எனது பிறந்தநாள் என்ன மன்னிச்சு விட்ருங்க” என குடியிருப்பாளர்களிடம் கெஞ்சியுள்ளார். உடனே குடியிருப்பாளர்கள் காவல்துறையினரை அழைப்பதற்கு பதிலாக திருடன் என எழுதப்பட்ட ஒரு கேக்கை ஆர்டர் செய்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடி திருடருக்கு பிறந்தநாள் கொண்டாடினர்.
View this post on Instagram
அதன் பின் அந்தத் திருடன் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவிற்கு பலரும் அதற்கு நகைச்சுவையாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
