அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ள நீங்கள் நலமா என்ற திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். அரசின் திட்ட பயன்கள் உரிய மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளதா என்பதை உறுதி செய்ய நீங்கள் நலமா திட்டம் இன்று தொடங்கப்படுகின்றது. இந்த புதிய திட்டத்தை இன்று காலை சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

இந்த திட்டத்தின் மூலம் முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், அனைத்து துறை செயலாளர்கள், துறையின் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் என பொதுமக்களை நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்துக்களை கேட்க உள்ளனர்.