திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, சிபிஐ, சிபிஎம், கொமதேக, ஐயூஎம் எல், மமக, தவாக ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், கொமதேக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தொகுதி பங்கீட்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் விசிக 3 தொகுதிகளும், மதிமுக 2 தொகுதிகளும், காங்கிரஸ் 10, மமக 1, தவாக 1 தொகுதிகளை கேட்டு வருகின்றன. இது குறித்து இன்று முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.