தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யுமாறு நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டு உள்ளார். இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது, இயக்கத்தை பலப்படுத்துவது மற்றும் ரசிகர்களின் செயல்பாடு குறித்து அறிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஷ்ஸி ஆனந்த் தமிழ்நாடு முழுவதும் நேரடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.