தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய மன்றத்திற்கு ஒரு முக்கிய உத்தரவினை போட்டுள்ளார். அதாவது விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு போட்டுள்ளாராம். அதன்படி புஸ்ஸி ஆனந்த் தமிழகம் முழுவதும் நேரடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஏற்கனவே ஆன்லைன் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளதால் அடுத்த கட்டமாக அரசியலை நோக்கி அவர் நகர்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியானதால் கண்டிப்பாக விஜய் அரசியலுக்குள் வருவார் என்று கூறப்படுகிறது.