தமிழகத்தில் ஆவின் நிறுவனமானது மக்கள் அதிக அளவு பயன்படுத்துவரும் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை திடீரென்று நிறுத்தியது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 4.5 சதவீதம் கொழுப்பு சத்து நிறைந்த பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தி அதற்கு பதிலாக டிலைட் என்ற புதிய பாடலை விற்பனை செய்து வருகிறது .

இதற்கிடையில் தனியார் நிறுவனமான ஆரோக்கிய பால் நிறுவனம் லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைத்துள்ளது. அதேபோல் தயிரின் விலையும் ஒரு கிலோவுக்கு எட்டு குறைப்பதாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தற்போது அரசின் ஆவின் நிறுவனம் பச்சை பால் பாக்கெட் விநியோகத்தை நிறுத்தியுள்ள நிலையில் தனியார் பால் பாக்கெட்டின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலும் அந்த பால் பாக்கெட்டை மக்கள் நாடி செல்ல வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.